Thursday, May 17, 2007

பெண் சிசு

பெண் சிசு

அநேகமாக....
தாய் பால் சுவைக்கும் முன்
கள்ளிப் பாலில் மூச்சடக்கப்படலாம்!
அல்லாமல்...
அரசின் தொட்டில்களில்
அனாதைகளின் தொகையில் ஒன்றாகக்
கூட்டப்படலாம்!
ஒரு வேளை... விதிவிலக்கினால்....
சமயத்தில்
கல்யாணச் சந்தையில்
மிருகங்கள் தம்மை
விலை பேசி மேய வர
இவள் மாடாக நிறுத்தப்படலாம்!
மானுட உருவில்
மிருகம் வந்து மேய்ந்து
உழுத பின்
அறுவடை ரண வேதனையாய் வதைத்தாலும்
"சுகப் பிரசவம்" என்று
பொய் பேசப் படலாம்!
சில நேரம்
இவளும் கூட நெல் மணி சேகரிப்பாள்...
தனக்கு மகள் பிறந்தால்.....??????

கூகுளின் புதிய தமிழ் குழுமம் - தமிழ் பிரவாகம்








கூகுள் குழுமங்கள்
தமிழ் பிரவாகம்
groups.google.com –இல் கடந்தவைகளைப் பார்

Tuesday, May 15, 2007

தமிழ் பிரவாகம்

தமிழ் மொழியில் தீராத அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மட்டும் உரிய குழுமம் இது. தமிழில் படைப்புகள் இயற்ற விரும்புபவர்களும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது. இக் குழுமம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மற்றும் பல சுவையான இழைகளை உருவாக்கி சகல தரப்பு சுவைஞர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற ஆவலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அங்கத்தினரும் அறிமுக இழையிலிருந்து சகல இழைகளிலும் பங்கு பற்றி மகிழ வேண்டுமென்று நாம் விரும்ம்புகின்றோம். இங்கே தொடர்புகளிலிருந்து சகலவிதமான பங்கேற்பும் முழுக்க முழுக்க தமிழ் மொழி மூலமே கையாளப்பட வேண்டும். இணைய முகவரிகளும் , மின் அஞ்சல் முகவரிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

அன்பர்களின் விமர்சனங்களும் , சீர்தூக்கலும் மற்றவர்களின் மனம் புண்படாத நாகரீக எல்லைகளுக்குட்பட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன் இருக்க வேண்டும் என்பதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மொழி அல்லது மதம் அல்லது இனம் என்று பிரிவினை வேறுபாடுகளோ அல்லது அவற்றை தூற்றுதலோ அல்லது அவமரியாதையோ இங்கு அங்கீகரிக்கப்பட மாட்டாது.

முற்றிலும் நட்புக்கு இன்முகம் காட்டி , தமிழுக்கு உயிர் மூச்சை ஈதலில் முன் நிற்கும் புனிதமான தமிழ் நெஞ்சங்களை ஒன்று கூட்டி தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் பங்கமேதும் எம்மால் வராது என்ற கட்டியத்துடன் தமிழ் பெருமை என்னும் மகுடத்தின் ஒளி மென் மேலும் மெருகேற ஒரு சிறு பங்களிப்பாக எமது சேவையை தொடங்கி தொடர ஏதுவாக இக் குழுமம் விளங்க வேண்டுமென்ற தீராத ஆர்வத்துடன் இக் குழுமத்தின் வளர்சியின் பொறுப்பை இக் குழுமத்தின் உறுப்பினராக அறிமுகமாகும் ஒவ்வொரு பயனரிடமும் ஒப்படைக்கின்றோம்.

வருக! வளர்க! வாழ்க!