இங்கு கவிதை புனையும் ஆற்றல் உள்ள அனைவரின் ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். கவிதைகள் தமிழ் வார்த்தைகளால் ஆனவையாக இருக்க வேண்டும். வெண்பா, அல்லது மரபுக் கவிதை, வடிவத்தில் இருக்க வேண்டும். நாம் கொடுக்கும் தலைப்பினைச் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் அந்தாதி வடிவில் இருக்க வேண்டும். ஒருவர் ஆகக் குறைந்தது பத்து வெண்பாவோ அல்லது பத்து கவிதையோ எழுதலாம். மேலதிகமாக எழிதினாலும் சந்தோஷமே. ஒருவர் முடித்த அந்தத்திலிருந்து இன்னொருவர் அடுத்த பத்து பாடல்களை எழுத வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதியில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு தலைப்பும் அறிவித்த பின் அம் மாத்தத்தின் ஏழாம் திகதிக்குள் அறிவித்த தலைப்பின் கீழ் அந்தாதி எழுத விரும்புபவர்கள் தமது பெயரை எம்மிடம் தெரிவிக்கவும். பெயர் வரிசையின் படி ஒவ்வொருவர் பின் ஒவொருவராக உங்கள் அந்தாதிகளை அனுப்பலாம்.
வாசகர்களின் எத்தகைய விமர்சனங்களையும் சீர் தூக்கல்களையும் எதிர்கொள்ளக் கூடிய மனப்பக்குவமுள்ள அனைத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொருவரும் தமது படைப்புகளை குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் எழுதவும். உங்கள் கவிதைப் பக்கத்திற்கு நீங்களே பெயர் சூட்டுங்கள்.
