Showing posts with label பெண் சிசு. Show all posts
Showing posts with label பெண் சிசு. Show all posts

Thursday, May 17, 2007

பெண் சிசு

பெண் சிசு

அநேகமாக....
தாய் பால் சுவைக்கும் முன்
கள்ளிப் பாலில் மூச்சடக்கப்படலாம்!
அல்லாமல்...
அரசின் தொட்டில்களில்
அனாதைகளின் தொகையில் ஒன்றாகக்
கூட்டப்படலாம்!
ஒரு வேளை... விதிவிலக்கினால்....
சமயத்தில்
கல்யாணச் சந்தையில்
மிருகங்கள் தம்மை
விலை பேசி மேய வர
இவள் மாடாக நிறுத்தப்படலாம்!
மானுட உருவில்
மிருகம் வந்து மேய்ந்து
உழுத பின்
அறுவடை ரண வேதனையாய் வதைத்தாலும்
"சுகப் பிரசவம்" என்று
பொய் பேசப் படலாம்!
சில நேரம்
இவளும் கூட நெல் மணி சேகரிப்பாள்...
தனக்கு மகள் பிறந்தால்.....??????