Sunday, June 17, 2007

அம்மா - கதை சொல்லலாமா?-3

கதை 3

அந்தச் சிறுவனின் தாய் அழுது கொண்டிருந்தாள்.

"ஏனம்மா அழுகிறாய்?" என்று அந்தச் சிறுவன் தாயிடம் கேட்டான்.

"ஏனென்றால் நான் தாய்.," என்று தாய் சொன்னாள்.

"எனக்குப் புரியவில்லை," என்றான் பையன்.
தாய் அவனை அணைத்து உச்சிமோர்ந்து சொன்னாள், "அது உனக்கு எப்போதுமே புரியாது மகனே!"

உடனே அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் சென்று கேட்டான் "ஏன் அம்மா காரணமில்லாமல் அழுகிறாள்?"
"எல்லா தாய்மாரும் இப்படித் தான் காரணமேயில்லாமல் அழுவார்கள்," என்றார் அவனுடைய தந்தை அலட்சியமாக.

அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானான். அப்போதும் அவனுக்குப் புரியவில்லை அவனுடைய அம்மா எதற்காக அழுகிறாள் என்று. உடனே அவன் கடவுளைக் கேட்டான் "கடவுளே! ஏன் எப்போதும் காரணமில்லாமல் தாய்மார் அழுகிறார்கள்T"

கடவுள் சொன்னார், "மகனே, தாய்மாரை நான் சிருஷ்டிக்கும் போது அவர்களை மிகச் சிறப்பானவர்களாகவும் விஷேஷத் தன்மையும் தரமும்ள்ளவர்களாகவும் சிருஷ்டித்தேன்.அவர்களது தோள்களுக்கு இவ்வுலகையே தாங்குமளவு சக்தியையும் அதே நேரம் இன்னொருவருக்கு அரவணைப்பாக சாய்ந்து கொள்ளப் போதுமான அளவுக்கு மென்மையையும் கொடுத்தேன். பிரசவ வேளைகளின் போது உருவாகும் வலியின் வேதனையை தாங்கிக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூடிய பக்குவத்தையும் , வலுவையும் அவர்களின் வலுவான மனதில் ஆழமான உறுதியாகவும், அவளுடைய இடுப்பெலும்புகளில் பலமாகவும் கொடுத்தேன்.அதே தாய்க்கு அவள் பெற்ற பிள்ளைகளாலேயே கிடைக்கும் ஏமாற்றங்களையும், மறுதலிப்புகளையும் தாங்கிக் கொள்ளும் மனதையும் கொடுத்தேன். .

"அவளுடைய குடும்பத்தில் யாராவது ஒருவரோ அல்லது எல்லொருமேயோ வாழ்கையில் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் நிராசைகளாகி வாழ்கயில் வலுவிழந்து , தைரியமிழந்து, மனம் தளர்ந்து போகும் தருணங்களில் அவர்களை அரவணைத்து, ஆலோசனை வழங்கி, துவண்டு போகாமல் தைரியப்படுத்தி அவர்களை மீண்டும் வழி நடத்தும் திறமையையும், பொறுமையையும், நம்பிக்கையையும் , மன உறுதியையும் நான் தய்க்குக் கொடுத்தேன்.

"அவளுடைய குழந்தகளை அன்போடு பரமரிக்கவும் , அரவணைக்கவும், வளார்த்தெடுக்கவும் அவளுக்கு அன்பு செலுத்தும் மென்மையான இதயத்தையும் கொடுத்து பிற்காலத்தில் பிள்ளைகள் விடலைப் பருவத்துக்கேயுரிய அறியாமை, காலித்தனம், அலட்சியப்போக்கு, தாழ்வு மனப்பான்மை போன்ற கெடுபிடிகளிலிருந்து அவர்களை காப்பாற்றி, தேற்றி வரச் செய்யவும், அதே பிள்ளைகள் அவளை மிக மிகக் கொடுரமான முறையில் மனம் வருந்தச் செய்யும் பொழுதுகளில் கூட தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், வலிமையையும் அந்த மென்மையன அன்பு உள்ளத்துக்குக் கொடுத்தேன்.

"அதே போல் தான் அவர்களுக்கு கண்ணீரையும் கொடுத்தேன். அவர்களுடைய தாய்மை உணர்வுகளின் (இன்ப, துன்ப) உச்சைத்தை ஆற்றும் ஒரு வடிகாலாக. அது ஒன்று தான் நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பலஹீனம். "

"மகனே! ஒரு தாயின் அழகு அவள் அணியும் உடைகளிலோ அவளது உடலமைப்பிலோ அல்லது அவளுடைய தலையலங்காரத்திலோ இல்லை. அம்மாவின் அழகு அவளுடைய ஆழமான கண்களில் தான் இருக்கிறது, ஏனெனில் அது தான் அவள் தன் குடும்பத்தினருக்காக வற்றாத வளமாக வைத்திருக்கும் அன்பும், பாசமும் குவிந்து கொட்டிக்கிடக்கும் அவளுடைய இதயத்துக்கான வாசல் கதவுகள்" என்றாராம் கடவுள்.

அன்புடன்
சுவாதி.

No comments: