Sunday, June 17, 2007

கூட்டுக் குடும்பதினம்!

இன்று கூட்டுக் குடும்ப தினம் மே 15 குடும்ப தினம் மிக அழகுதான் கூட்டுக் குடும்பத்தில் தியாகம் விட்டுக்கொடுக்கும் தன்மை பகிர்ந்து உண்ணுதல் ..மரியாதை,
கருணை ,,தலைமை வகிக்கும் திறன் ,,,,,குழந்தைகளின்
சிறந்த வளர்ப்பு ,,,இப்படி எத்தனையோ நன்மை ,,,,,
குடும்ப தினம்
எல்லை இலா ஆனந்தம் ,
உற்வினர்களின் சுற்றம்
உறவை வளர்க்கும் ஏற்றம்
கூட்டுக் குடும்பம் ,
மனம் கொண்டாட்டம்
இணைந்து செய்யும் செயலே தனிதான்
அதில் இருக்கும் பெருமையும் தனிதான்
தியாக மனப்பான்மை தன்னால் வளர ,
விட்டுக்கொடுக்கும் தனமைப் பெருக ,
பெரியவர்கள் ஆசிகள் தினமும் சூழ
அன்பு மழையில் ஓயாமல் நனைய
ஓ கூட்டுக் குடுமபம் திரும்ப வருமா ?
இன்ப ஊற்று மீண்டும் பெருகுமா ?
அன்புடன் விசாலம்

No comments: