Sunday, June 17, 2007

லட்சத்தில்.. ஒருவள் -விசாலம்

உள்ளே நுழைந்தேன்,
கட்டிலும் பூச்சரங்களும்,
வா வா" என்று வரவழைத்தன ,
ஆனால் என் முகத்தில்
ஏன் சிரிப்பு இல்லை?
உத்சாகம் இல்லை?
மகிழ்ச்சி இல்லை,
ஆர்வமில்லை,
இப்படியா ஒரு முதலிரவு?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வந்தாள் அவள் ,என் காதலி
இன்று என் மனைவி
அன்ன நடையுடன்
புன்முறுவலுடன்,
எங்கள் காதல் ஒரு புனிதக் காதல்
நாலு வருடங்ள் தவம் ,
பொறுமையுடன் காதல்,
இந்த நாள் வருமா என்று
ஏங்கியக் காதல் ,
விரல் நுனிக்கூடப்
படாதக் காதல் ,,
ஆனால் இன்று ஒரு பெருமூச்சு,
இந்த நாள் ஏன் வந்தது?
ம்னம் கனத்தது
எதிர்க்காலம் இருட்டானது,
உச்சந்தலையில் ஒரு இடி ,
என் கனவுக் கன்னி
அருகில் அமர்ந்தாள்,
சற்று நேரம் மௌனம்,,
டிக்டிக்,,கடிகாரம் பேசியது,
"என்க்கு எல்லாம் தெரியும் "என்றாள்
நான் அவள் தோளில்
முகம் புதைத்தேன்
தேம்பித்தேம்பி அழுதேன் .
ஆண்கள் அழலாமா?
நான் அழுதேன் ,,,,
அவள் தடுக்கவில்லை '
"எப்படி இது" தயங்கி இழுத்தாள்
"கிராமத்தில் பல்வலி ,
வலிக்கு ஒரு ஊசி ,,அவ்வளவுதான் '
"என்று தெரிந்தது"?கேட்டாள்,அவள்
இரத்தப் பரிசோதனை ,,"
மேலே பேசவில்லை ,
விம்மினேன் நான் ,
அவள் அணைத்தாள்,
"நான் இருக்கிறேன்
உங்கள் நிழல் போல்,
கவலை ஏன் ?
என் கண்ணிரைத் துடைத்தாள்
என்ன அன்பு ,,என்னப் பண்பு !
வியந்துப் போனேன் ,
"மனப்பொருத்தம்தான் முக்கியம்
வாழ்க்கை என்றப் படகு
அன்பு என்ற துருப்பு ,
ஓட்டலாம் வாருங்கள்,
அன்பில் உலகம்
நம் கையில் "அவள் தேவியானாள்
நான் பிரமித்துப் போனேன் ,
அவள் எனக்குப் சக்தியானாள்
"அப்போ நமக்குக் குழந்தை?
என் வாயைப் பொத்தினாள்
'ஆனாதை இல்லம் போகலாம்,
ஒரு சிசு நம் கையில்
நல் வாழ்வு பெறட்டும் "
எத்தனைச் சுலபமாகச் சொல்லி விட்டாள்,
என் எய்டுஸ்க்கு
அன்பு என்ற மருந்துக் கொடுத்து,
எனக்கு உயிர்க் கொடுத்தச்சக்தி அவள்
லட்சத்தில் ஒருவள் அவள்,
அவள் பெய்ரும் சாந்தி
தருவதும் சாந்தி ,,,,,,,,,,
அன்புடன் விசாலம்

No comments: