Saturday, June 2, 2007

சங்கமம்...




எம்மமோடு இணைய வந்திருக்கும் புதிய நண்பர்களை இவ் இழை மூலம் வருக வருகவென இரு கை நீட்டி வரவேற்பதில் தமிழ் பிரவாக குழுமம் மிகவும் மகிழ்சியடைகின்றது. இது உங்களுக்கான இழை. உங்களைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள உதவும் இழை.

இக் குழுமத்தில் உறுப்பினராக தம்மை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பயனரும் தம்மை இவ் அலையில் சங்கமித்துக் கொள்ளலாம். இந்தப் பகுதி ஒவ்வொரு புதிய அங்கத்தினரும் தம்மை இக் குழுமத்திலிருக்கும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஓரிரு வார்த்தைகள் உங்களைப் பற்றி இங்கே எழுதி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். தமிழ் பிரவாகக் குழுமம், இக் குழுமம் தொடர்பான கடிதப்போக்குவரத்து களையும், படைப்புகளையும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலேயே உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது. இணைய முகவரிகளும், மின் அஞ்சல் முகவரிகளும், கடிதங்களுக்கான தலைப்புகளும் மாத்திரமே ஆங்கிலத்தில் இருக்கலாம்.

இக் குழுமத்தின் தொடர்புகளுக்கும் , படைப்புகளுக்கும் பயன்படுத்தப் படும் தமிழ் தட்டச்சுரு யுனிகோட் முறையில் அமையப் பெற்றது. இதற்கான தமிழ் தட்டச்சுருவை எமது குழுமத்தின் ஆவணங்கள் பகுதியில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதற்கான சுட்டி இதோ: ஈ-கலப்பை_2.0

தமிழ் தட்டச்சுரு பதிவிறக்கம் செய்ததும் இங்கே வந்து உங்களைப் பற்றி எழுதுவதற்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் "சங்கமம்" சுட்டியை பயன் படுத்தி அங்கே இருக்கும் பதில் பொத்தானை அழுத்திய பின் எழுதத் தொடங்கவும்.

வருக நண்பர்களே! உங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லத் தொடங்குங்கள்...!!

சங்கமம்

No comments: